காரில் உள்ள பட்டன்களின் பயன்களை இரண்டு இளைஞர்கள் வேடிக்கையான முறையில் விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
காரில் உள்ள பட்டன்களின் பயன்களை இரண்டு இளைஞர்கள் வேடிக்கையான முறையில் விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இதனால் பலரும் தங்களது நேரத்தை இணையதளத்தில் செலவிடுகின்றனர். அதிலும் அதிகப்படியான மக்கள் ரீல்ஸ் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படி ரீல்ஸில் பகிரப்பட்ட ஒரு வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இந்திய மண்ணில் இருந்து இந்தோ பசிபிக் திட்டங்களை வெளியிடுவேன்; ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பெருமிதம்!!
இரண்டு இளைஞர்கள் காரில் உள்ள ஒவ்வொரு பட்டனும் எதற்காக பயன்படுகின்றன என்பதை வேடிக்கையான முறையில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ yo_ur_jonnyy என்ற பக்கத்திலிருந்து பகிரப்பட்டது. இது ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், மூட் பட்டன் முதல் ரீசெட், ட்ரிப், டிஸ்பிளே என பல பட்டன்களின் பயன்களை மிக வேடிக்கையான முறையில் இரண்டு இளைஞர்களும் விளக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: பல ஆதார் அட்டைகளில் ஒரே நபரின் படம்! ஆதார் ஆணையத்துக்கு ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்
இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு பயனர், இவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள்? என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், இந்தத் திறமை இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.