15 நிமிடம்தான் இடைவெளி..! பத்திரிக்கையாளர் உட்பட 2 பெண்களை பாலியல்  துன்புறுத்தல் செய்த வாலிபர் கைது...!

 
Published : Nov 17, 2017, 07:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
15 நிமிடம்தான் இடைவெளி..! பத்திரிக்கையாளர் உட்பட 2 பெண்களை பாலியல்  துன்புறுத்தல் செய்த வாலிபர் கைது...!

சுருக்கம்

Two women including a journalist at the Delhi Metro Rail Station have been detained by police and arrested by the police.

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 2 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ. மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் பத்திரிக்கையாளர் உட்பட 2 பெண்களை துண்புறுத்தியதாக போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. 

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். 

அப்போது வாலிபர் பத்திரிக்கையாளரை தொட்டு விட்டு செல்வதும் அவர்கள் அவனுடன்  சண்டையிட்டதும் வாலிபர் ஓடும் போது அவர்கள் விரட்டி சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது.
 
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அங்கு இருந்த டீக்கடையில் வேலை பார்த்த அகிலேஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

ரெயில்வே நிலையத்தில் டீ வியாபாரம் செய்யும் அந்த வாலிபர் 15 நிமிட இடைவெளியில் பெண் பத்திரிக்கையாளர் உள்பட 2 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளியை  கண்டுபிடிக்க  ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும், இரண்டு நாட்களுக்கு மேல் 5,000 க்கும் அதிகமானவர்கள்  விசாரணை செய்யப்பட்டனர் எனவும் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!