இன்று இரவு பூமிக்கு மிக அருகில் வரும் நீல நிலா! ஆகஸ்ட் மாதம் இரண்டு முறை தோன்றும் 'சூப்பர் மூன்'!

Published : Aug 01, 2023, 12:04 PM ISTUpdated : Aug 01, 2023, 12:27 PM IST
இன்று இரவு பூமிக்கு மிக அருகில் வரும் நீல நிலா! ஆகஸ்ட் மாதம் இரண்டு முறை தோன்றும் 'சூப்பர் மூன்'!

சுருக்கம்

சூப்பர் மூனின் போது, ​​வானத்தில் உள்ள முழு நிலவின் அளவு 14 சதவீதம் பெரியதாவும் 30 சதவீதம் அதிக பிரகாசமானதாகவும் தெரியும்.

பூமியும் சந்திரனும் அவற்றின் சுற்றுப்பாதையில் இருக்கும்போது, ​​விண்வெளியில் மிக நெருக்கமான சந்திப்பு நடைபெறும். அப்போது தெரியும் சந்திரன் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதான இந்த நிகழ்வு, இந்த ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் மூன் இரண்டு முறை நடைபெறும்.

சூப்பர் மூன் நிகழ்வின்போது, ​​சந்திரன் இன்னும் பிரகாசமாகத் தோன்றும். சந்திரனின் மேற்பரப்பு தெளிவாகவும் பெரியதாகவும் தோன்றும். இந்த நிகழ்வு வானியலாளர்கள் சந்திரனின் நிலப்பரப்பு, புவியியல் அம்சங்கள் மற்றும் தாக்கப் பள்ளங்கள் ஆகியவற்றை அதிக தெளிவுடன் ஆய்வு செய்ய அனுமதிக்கிறது.

தீயில் கருகிய கிடார், தபேலா... இசையால் ஒழுக்கக்கேடு ஏற்படுமாம்! இசைக்கருவிகளைக் கொளுத்தும் தாலிபான்!

சூப்பர் மூன் என்றால் என்ன?

சூப்பர் மூன் என்பது விண்வெளியில் ஒரு அற்புதமான நிகழ்வு. இந்த நேரத்தில் முழு நிலவு வழக்கத்தை விட வானில் பெரிதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். பெரிஜி எனப்படும் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளிக்கு  நிலவு வரும்போது இந்த கவர்ச்சிகரமான நிகழ்வு நிகழ்கிறது.

பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை சரியான வட்டப்பாதை அல்ல; அது நீள்வட்டமானது, எனவே பூமியில் இருந்து நிலவின் தூரம் நிலவு அதன் சுற்றுப்பாதையில் உள்ள இடத்தைப் பொறுத்து மாறுபடும். தொலைதூரப் புள்ளியில் (அபோஜி), சந்திரன் பூமியிலிருந்து சுமார் 4,05,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அதே சமயம் நெருங்கிய புள்ளியில் (பெரிஜி), அது சுமார் 3,63,104 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும்.

அபோஜி மற்றும் பெரிஜி இடையே சுமார் 27,000 மைல்கள் (42,000 கிலோமீட்டர்) வித்தியாசம் உள்ளது. இதுதான் சூப்பர் மூன் நிகழ்வை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இதன் மூலம் சூப்பர் மூனின் போது, ​​வானத்தில் நிலவின் அளவு மற்ற நாட்களில் உள்ள அளவை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் இருக்கும்.

மகாராஷ்டிரா கிரேன் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்; பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

சூப்பர் மூன் எப்போது நிகழும்?

இந்த ஆகஸ்ட மாதம் நடக்கும் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வுகளில் முதலாவது சூப்பர் மூன் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தோன்றும். இது பூமிக்கு அருகில் 3,57,530 கி.மீ தொலைவில் இருப்பதால் வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.

ப்ளூ மூன் என்றும் அழைக்கப்படும் இரண்டாவது சூப்பர் மூன் ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு நிகழும். அப்போது நிலா பூமிக்கு இன்னும் நெருக்கமாக வரும். பூமியில் இருந்து 3,57,344 கிமீ தொலைவில் தெரியும். ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் ஏற்படுவது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு இரண்டு சூப்பர் மூன்கள் தோன்றின. இனி இதுபோன்ற நிகழ்வு இன்னும் 15 வருடங்கள் கழித்து தான் நடக்கும். அதாவது 2037இல் ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்களைக் காணலாம்.

அரக்கப் பறக்க வருமானவரித் தாக்கல்! கடைசி நாளில் புதிய சாதனை! இனி ரூ.5000 அபராதம்!

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!