குனோ தேசிய பூங்காவில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் இறப்பு! ஒரே வாரத்தில் 3வது முறை!

By SG BalanFirst Published May 25, 2023, 7:02 PM IST
Highlights

இரண்டு மாத குட்டி ஒன்று மிகவும் பலவீனம் அடைந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அது இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் அதிக வெப்பநிலை மற்றும் நீரிழப்பினால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் இன்று இறந்துவிட்டன. சமீபத்தில் பிறந்த நான்கில் மூன்று சிறுத்தை குட்டிகள் சென்ற இரண்டு நாட்களில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம், தேசிய பூங்காவில் 'ஜ்வாலா' என்ற பெண் சிறுத்தை நான்கு சிறுத்தை குட்டிகளை ஈன்றது. அவற்றில் மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட குட்டி செவ்வாய்க்கிழமை இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே 23 அன்று, வெப்பநிலை சுமார் 46-47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவு செய்யப்பட்டது. இது இப்பகுதியில் வெப்பமான நாளாக அமைந்தது. செவ்வாயன்று, நீரிழப்பால் பாதிக்கப்பட்டு பலவீனமான குட்டிகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றின் எடை குறைவாக இருந்தால் குட்டிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்க கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் இறந்துவிட்டன என அதிகாரிகள் சொல்கின்றனர்.

ஆவின் மீது முதல்வருக்கு திடீர் பாசம் ஏன்? அறிக்கை விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை

நான்காவது குட்டி பால்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க நம்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்நடை மருத்துவ நிபுணர்களுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றமும் இரண்டு மாதங்களுக்குள் மூன்று சிறுத்தைகள் இறந்தது குறித்து கவலை தெரிவித்தது. தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்பட்ட சிறுத்தைகளை அண்டை மாநிலமான ராஜஸ்தானுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.

"இரண்டு மாதங்களுக்குள் மூன்று இறப்புகள் மிகவும் கவலைக்குரிய விஷயம். நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான கட்டுரைகளை வைத்துப் பார்க்கும்போது பல சிறுத்தைகளுக்கு குனோவில் போதுமான சூழல் இல்லை என்று தோன்றுகிறது" என உச்ச நீதிமன்றம் கூறியது.

"ஏன் ராஜஸ்தானில் பொருத்தமான இடத்தைத் தேடக்கூடாது? ராஜஸ்தான் எதிர்க்கட்சியால் ஆளப்படுவதால் அதை நீங்கள் கருத்தில் கொள்ளமாட்டீர்கள்" என நீதிமன்றம் தெரிவித்தது.

மார்ச் 27 அன்று, சாஷா என்ற பெண் சிறுத்தை சிறுநீரகக் கோளாறால் இறந்தது. ஏப்ரல் 23 அன்று, உதய் இதய-நுரையீரல் செயலிழப்பால் இறந்தது. மே 9 அன்று, தக்ஷா என்ற மற்றொரு பெண் சிறுத்தை, இனச்சேர்க்கையின்போது ஆணுடன் சண்டையிட்டு இறந்தது.

இரவு நேரங்களில் காம வெறி பிடித்து அலைத்த வாலிபர்! 30 பெண் குழந்தைகளை கொன்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

click me!