முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதி.. அவரின் உடல்நிலை எப்படி உள்ளது?

By Ramya sFirst Published May 25, 2023, 4:44 PM IST
Highlights

சிறை கழிவறையில் இருந்து கீழே விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் தற்போது ஆக்ஸிஜன் உதவியில் இருக்கிறார்.

பண மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் குளியலறையில் விழுந்ததாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சத்யேந்தர் ஜெயின், தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆக்ஸிஜன் ஆதரவில் இருக்கிறார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை முதுகெலும்பு பிரச்சனையை பரிசோதிப்பதற்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் இன்று கீழே விழுந்துள்ளார். சனிக்கிழமையன்று தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை இரண்டாவது கருத்தாய்வுக்காக மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

இதையும் படிங்க : புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சர்ச்சை.. காங்கிரஸ் எதிர்ப்புக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?

ஜெயின் உடல்நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ பொதுமக்களுக்கு நல்ல சிகிச்சை மற்றும் நல்ல ஆரோக்கியம் வழங்க இரவு பகலாக உழைத்தவர், இன்று ஒரு சர்வாதிகாரி அந்த நல்லவரைக் கொல்ல முனைந்துள்ளார். 

கடவுள் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார், அவர் அனைவருக்கும் நீதி செய்வார். சத்யேந்திரா ஜி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த பாதகமான சூழ்நிலைகளுக்கு எதிராக போராட கடவுள் அவர்களுக்கு பலத்தை வழங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளர்.

பணமோசடி வழக்கு தொடர்பாக 2022 மே 31 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

இதையும் படிங்க : டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரும் கெஜ்ரிவால்… சேவைக்காக அல்ல; திறமையின்மையை மறைக்க... அஜய் மக்கன் சாடல்!!

click me!