வருமானவரி ‘ரீபண்ட்’  பெறுவதில் ஊழல் - வருமானவரித்துறை அதிகாரிகள் இருவர் கைது

Asianet News Tamil  
Published : Sep 27, 2017, 09:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
வருமானவரி ‘ரீபண்ட்’  பெறுவதில் ஊழல் - வருமானவரித்துறை அதிகாரிகள் இருவர் கைது

சுருக்கம்

two income tax officers arrested by police

குடும்பத்தாருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக பொய்யான அறிக்கை அளித்து, வருமானவரி ரீபண்ட் பெற்றதில் தகவல்தொழில் நுட்ப துறையைச் சேர்ந்த 200 பணியாளர்கள் சிக்கியுள்ளனர். இந்த 200 பேருக்கு ரீபண்ட் பெற்றுக்கொடுத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

புகார்

வருமானவரி ரீபண்ட் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ஐதராபாத்வருமான வரி துணை இயக்குநர் எம். மோகன் பாபு ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஜூன் 19-ந்தேதி புகார் செய்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து, போலீஸ் துணை ஆணையர் கே. ராம் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இது குறித்து போலீஸ் துணை ஆணையர் கே. ராம்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தாவது-

வருமானவரி ரீபண்ட்

வருமானவரிச் சட்டம் பிரிவு 80டி, 80டிடி விதியின்படி, வருமானவரி செலுத்துபவர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு செலவு செய்யும் மருத்துவச்செலவுகளைக் கணக்குக்காட்டி, வரிசெலுத்திய பணத்தில் இருந்து குறிப்பட்ட அளவு திருப்பப் பெறலாம். இதை அடிப்படையாக வைத்து வருமான வரித் துறையில் பணியாற்றும் என். ஸ்ரீகாந்த் கவுடா(வயது34), முகம்மது கலீல்(34) ஆகியோர் ஊழல் செய்துள்ளனர்.

ரூ.ஒரு லட்சம்

இவர்கள் இருவரும் வருமான வரி செலுத்தும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை ரகசியமாகத் தொடர்பு கொண்டு, வருமானவரி செலுத்திய பணத்தை ரீபண்ட் பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதன் மூலம் ஏறக்குறைய 200-க்கும் அதிகமான நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை ரீபண்ட் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

10 சதவீதம் கமிஷன்

இதில் அந்த அதிகாரிகள் இருவரும் 10 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.1.36 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போல் பல ஆண்டுகளாக இந்த மோசடியை இரு அதிகாரிகளும் செய்துள்ளனர். வருமானவரி ரீபண்ட்பெற்றவர்களில் 50 பேர் போலாரீஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் ஆவர்.

நோட்டீஸ்

இதையடுத்து, வருமானவரியில் ரீபண்ட் பெற்றவர்கள் கணக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,ரீபண்டாக பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை

இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது ஐ.பி.சி. 420, 406 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த இரு அதிகாரிகளும் தில்சுக் நகரில் உள்ள வெங்கடேஸ்வரா காலணியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை நம்பள்ளி நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?