Tusker: பாலக்காடு பகுதியில் 2 ஆண்டுகளாக அட்டூழியம் செய்த யானையை மயக்கஊசி மூலம் பிடித்தனர்: கும்கியாக மாறுகிறது

By Pothy RajFirst Published Jan 23, 2023, 2:36 PM IST
Highlights

கேரளாவின் பாலக்காடு வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அட்டூழியம் செய்து,குடியுருப்புகள், விவசாய நிலங்களை சேதப்படுத்திவந்த காட்டுயானையை வனத்துறையினர் பிடித்தனர். 

கேரளாவின் பாலக்காடு வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அட்டூழியம் செய்து,குடியுருப்புகள், விவசாய நிலங்களை சேதப்படுத்திவந்த காட்டுயானையை வனத்துறையினர் பிடித்தனர். 

பாலக்காடு பகுதியில் அட்டூழியம் செய்த இந்த யானையைக் பிடிக்க பி-7 என்ற பெயருடன் ஆப்ரேஷனைத் தொடங்கிய கேரள வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்குப்பின் மயக்கஊசி போட்டு பிடித்தனர்
கும்கி யானைகள் உதவியுடனும், கால்நடை மருத்துவர்கள் உதவியுடனும், பாலக்காடு பகுதியில் அட்டாகாசம் செய்த யானை பிடிக்கப்பட்டு, பெரிய மரங்களால் செய்யப்பட்ட தடுப்புகளுக்குள் யானை அடைக்கப்பட்டுள்ளது.

கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசிதரன் கூறுகையில் “ பாலக்காடு பகுதியில் 2 ஆண்டுகளாக அட்டகாசம் செய்த யானையை பிடிப்பது ஆபத்தானதாகவும், சிரமமானதாகவும் இருந்தது. அதை வெற்றிகரமாக முடித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள். ஏராளமான யானைகள் இந்தப் பகுதியில் இந்த யானை அதிகமான அட்டூழியம் செய்தது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணத்தின் பின்னணி என்ன?

மற்ற யானைகளின் நடத்தையையும் கூர்ந்து கவனித்து வருகிறோம். இப்போது பிடிபட்ட பி-7 யானை வனத்துறையினருக்கு சொத்தாகமாறிவிட்டது. இந்த யானைக்கு முறையான பயிற்சி அளித்து கும்கி யானையாக மாற்றப்படும்”எ னத் தெரிவித்தார்

பி-7 யானை, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தோனி, மலம்புழா, அகதேகேரா கிராமங்களை நாசமாக்கியது, குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது, விளைநிலங்களுக்குள் புகுந்து அழித்தது,கால்நடைகளை இரவு நேரத்தில் தாக்கி கொன்றது. கடந்த ஆண்டு முதியவர் ஒருவரை தாக்கி பி-7 யானை கொன்றது. 

இந்த பி-7 யானையால் மக்கள் பெரிய துன்பத்துக்கு ஆளாகினர். இந்த யானையைப் பிடிக்க மக்கள் கோரிக்கை வலிதுத்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் யானையைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
இந்த யானையைப் பிடிக்கும் ஆப்ரேஷன் கடந்த 3வாரங்களுக்கு முன் தொடங்கியது. யூக்காலிப்டன் மரங்களால் பெரிய ராட்சத கூண்டு யானையை அடைக்க  உருவாக்கப்பட்டது. 

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் இன்று தேசத்துக்கு அர்ப்பணிப்பு: கப்பலின் முழு விவரங்கள்!

பி-7 யானையைப் பிடிக்கவும், அதை அடிக்கி வழிக்கு கொண்டுவரவும் வயநாடு பகுதியில் இருந்து 3 கும்மியானைகளை வனத்துறையினர் பாலக்காடு வனப்பகுதிக்குள் இறக்கினர். 

இந்த பி-7 யானையைப் பிடிக்க 75 பேர் கொண்ட வனத்துறையினர் குழு தீவிரமாக செயல்பட்டது. கடந்த சனிக்கிழமை தோனி கிராமத்தில் உள்ள நெல் வயலில் புகுந்து பி-7 யானை அட்டூழியம் செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து யானையைப் பிடிக்க திட்டமிட்டனர். ஆனால் நெல்வயல் அமைந்திருந்த நிலப்பகுதி சரியில்லாமல் இருந்ததால், பி-7 யானை வனப்பகுதிக்குள் நகரும் வரை வனத்துறை அதிகாரிகள் காத்திருந்தார்கள்.

நேதாஜிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இலக்கு ஒன்றுதான்! மோகன் பகவத் பேச்சு

இதையடுத்து, பி-7 யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து பாலக்காடு பகுதியில் உள்ள முந்தூர் வனப்பகுதிக்குள் செல்லத் தொடங்கியது. இதையடுத்து, தலைமை கால்நடை அறுவை சிகிச்சை நிபுனர் மருத்துவர் அருண் ஜக்ரியா , துப்பாக்கி ஊசியில் மயக்க மருந்தைச் செலுத்தி, யானை மீது செலுத்தினர். யானை சிலமணிநேரத்தில் மயங்கியது. இதையடுத்து, 3 கும்கி யானைகள் உதவியுடன் பி-7 யானை பிடிக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டது. வனப்பகுதியில் இருந்து பி-7 யானை, லாரி மூலம் வனத்துறையினரின் பயிற்சிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.  

இது குறித்து மருத்துவர் ஜக்ரியா கூறுகையில் “ பி-7யானையைப் பிடிப்பது பெரிய சவாலானதாகஇருந்தது. இந்த யானையுடன் எப்போதும் 2 யானைகள் இருந்ததால்தான் பிடிக்க தாமதமானது. பி-7 யானையை கும்கியாக மாற்றும் பயிற்சி விரைவில் தொடங்கும்” எனத் தெரிவி்த்தார்

click me!