Netaji: Mohan Bhagwat RSS: நேதாஜிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இலக்கு ஒன்றுதான்! மோகன் பகவத் பேச்சு

By Pothy Raj  |  First Published Jan 23, 2023, 1:13 PM IST

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் இந்திய தேசத்தை உயர்ந்ததாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு ஒன்றாகத்தான் இருந்தது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.


ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் இந்திய தேசத்தை உயர்ந்ததாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு ஒன்றாகத்தான் இருந்தது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் 126வது பிறந்தநாள் பராக்ரம் திவாஸ் என்ற பெயரில் இன்று கொண்டாடப்படுகிறது. கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

Tap to resize

Latest Videos

தமிழக மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் கொரோனா பரவலுக்குப்பின் மிக மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி

இந்திய தேசத்தை உயர்ந்த தேசமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், தேசத்தை வல்லரசாக மாற்றும் கனவு இன்னும் நனவாகவில்லை. 

அந்த கனவை நனவாக்க அனைவரும் உழைக்க வேண்டும். உலகமே இந்தியாவை தலைமைப்பண்புக்கு உரியதாகப் பார்க்கிறது. நாம் உதாரணமாகத் திகழ வேண்டும். 

சுபாஷ் சந்திரபோஸின் குணங்கள் மற்றும் போதனைகளை அனைவரும் உள்வாங்கி, நாட்டை உலகத் தலைவராக மாற்றுவதற்கு உழைக்க வேண்டும். 

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் இன்று தேசத்துக்கு அர்ப்பணிப்பு: கப்பலின் முழு விவரங்கள்!

சுதந்திரப் போராட்டத்திற்காக நேதாஜி ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பிற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், அவருடைய பண்புகளை நாம் உள்வாங்குவதை உறுதிசெய்வதற்காகவும் நாங்கள் அவரை நினைவுகூருகிறோம். 

நேதாஜியின் சூழல் பாதைகள், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள், பாதை வெவ்வேறாக இருக்கலாம் ஆனால், இலக்கும், சேரும் இடமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. சுபாஷ் சந்திரபோஷ் முதலில் காங்கிரஸிலி் இருந்தார், அங்கு கடைபிடிக்கப்பட்ட சத்யாகிரஹம், அந்தோலன் மீது நம்பிக்கையிருந்து. 

ஆனால் ஒரு கட்டத்தில் இதுபோன்ற அறப்போராட்டம் மட்டும் சுதந்திரத்தைப் பெறுவதற்கு போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த நேதாஜி வேறுபாதையில் திரும்பினார். பாதைகள் வெவ்வேறாக இருக்கலாம் இலக்கு ஒன்று தான். அவரின் இலக்குகள் நம்முடைய இலக்குகள். இந்தியா என்பது உலகத்தின் சிறிய மாதிரி, உலகிற்கு நிவாரணத்தை இந்தியா வழங்க முடியும் என தேநாஜி நம்பினார். அவரின் இலக்கை நோக்கி நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்

இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்


 

click me!