சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிய செந்தில் அந்த வேலையை விட்டுவிட்டு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து ஆடை தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றபோது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் நெய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார். மோடி அணிந்த அந்த ஜாக்கெட் மிகவும் பிரபலமாகியுள்ளது.
இந்திய எரிசக்தி வார தொடக்க விழாவை முன்னிட்டு பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களுருவுக்கு வந்த பிரதமருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த ஜாக்கெட்டை பரிசாக அளித்தது.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரங்கா என்ற ஆடை தயாரிப்பு நிறுவனம் அந்த ஜாக்கெட்டைத் தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவர் செந்தில்.
35 வயதாகும் செந்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் அந்த வேலையை விட்டுவிட்டு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து ஆடை தயாரிக்கும் ஸ்ரீ ரங்கா நிறுவனத்தை 2008ஆம் ஆண்டு தொடங்கினார்.
Viral Video: திருமணக் கோலத்தில் பரீட்சைக்கு வந்த கேரளப் பெண்! லைக்ஸ் அள்ளும் வைரல் வீடியோ!
இது குறித்து ‘தி பிரிண்ட்’ இணையதளத்துக்குப் பேட்டி அளித்த செந்தில், “இந்த மோடி ஜாக்கெட் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு ஜாக்கெட் தயாரிக்க 20 முதல் 28 பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது.” என்று கூறினார்.
“மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகள் மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருந்தாலும், இந்திய சந்தையில் அதற்கான வரவேற்பு இப்போதுதான் வளர்ந்து வருகிறது” என்றும் செந்தில் கூறியுள்ளார்.
Delhi-Mumbai Expressway: 246 கிமீ தூர டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறப்பு!
நாங்கள் நிறைய கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் ஸ்டார்ட்அப்களுடனும் இணைந்து பணியாற்றுகிறோம் என்றும் இந்தியன் ஆயில், ஜோஹோ போன்ற நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் செந்தில் தெரிவிக்கிறார்.
இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கான தூண்டுதல் எப்படிக் கிடைத்தது என்று கேட்டதற்கு, “2007ஆம் ஆண்டு குரு திரைப்படத்தைப் பார்த்தது என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது, அப்போதுதான் நான் ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று முடிவு செய்தேன்” எனப் பதில் அளித்துள்ளார்.