ரயிலில் ஓசியில் பயணம் பண்ணியவர்களிடம் டிடிஆர் போட்ட  அபராதம் இத்தனை கோடியா?

First Published Jun 8, 2018, 2:09 PM IST
Highlights
TTR collect Rs. 42.15 cr penalty from ticketless travellers


ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ஏப்ரல் - மே இடையிலான காலத்தில் வசூலித்த அபராதம் மூலம் ரூ.42.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்களில் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதே சமயத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமலும் பயணம் செய்பவர்கள் ஏராளமாக உள்ளனர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் - மே இடையிலான ஒரு மாத காலகட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது குறித்து 7.59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 42.15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7.25 லட்சம் வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளன. அதன் மூலம், சுமார் ரூ. 41.22 கோடி ரூபாய் இந்திய ரயில்வே துறைக்கு வருமானம் கிடைத்தது.

அதே போல, மாத பயண சீட்டு எடுத்துவிட்டாலும், ஆள்மாறட்டம் செய்து பயணம் செய்ததாக 1,517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் ரூ.12.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

click me!