
ஜி.எஸ்.டி. அமலாகிவிட்டது எனக்கூறி நள்ளிரவில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்த, டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜி.எஸ்.டி.
நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த மாதம் 30-ந்தேதிநள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் ரெயில் ஏ.சி. பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு சேவை வரி 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 கூடுதல் கட்டணம்
இந்நிலையில், குஜராத் குயின் எக்ஸ்பிரஸ் ரெயில் சூரத் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த 30ந்தேதி இரவு சென்றது. நள்ளிரவு ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தவுடன், ஏ.சி. பெட்டியில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், அனைத்து பயணிகளிடம் சேவை வரியாக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி ரூ.20 கேட்டுள்ளார்.
வாக்குவாதம்
இதையடுத்து, பயணிகளுக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே கூடுதல்டிக்கெட் கட்டணம் அளிப்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜூலை 1ந் தேதிக்கு பின் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் களுக்கு மட்டுமே சேவை 18 சதவீதம் நாங்கள் ஜூலை 1ந்தேதிக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்தோம் என்று பயணிகள் கூறியும், டிக்கெட் பரிசோதகர் கேட்கவில்லை.
வீடியோ பதிவு
ேமலும், ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை பயணிகள் கேட்டனர். இதைக் கொடுக்க மறுத்த டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து கூடுதல் கட்டணம் கேட்டுக்கொண்டு இருந்தார். இதனால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவங்களை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வௌியிட்டனர்.
சமூகவலைதளங்கள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்பில்வைரலாகப் பரவி பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.
விடுவிப்பு
இதையடுத்து இந்த விஷயம் ரெயில்வே துறையின் உயர் அதிகாரிகளின் பார்வைக்குச் சென்று, அவர்கள் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். மேலும் அந்தடிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்து விடுவிக்கவும் ஆணையிட்டனர்.