உண்மையே எனது ஆயுதம் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றிய அவதூறு வழக்கில் இன்று குஜராத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், "உண்மையே எனது ஆயுதம்" என்று கூறினார். அதில், “இது ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம், உண்மையே எனது அடைக்கலம்” என்று பதிவிட்டிருந்தார். ராகுல் காந்திக்கு இன்று ஜாமீன் கிடைத்தது.
சூரத் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் எடுக்கும் வரை அவரது இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த விசாரணை ஏப்ரல் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தது. டெல்லியில் அவருக்கு அரசு ஒதுக்கிய லுடியன்ஸ் பங்களாவைக் காலி செய்ய ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!
2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தப்பியோடிய தொழிலதிபர்களான நிரவ் மோடி மற்றும் லலித் மோடியுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் கடைசிப் பெயரைக் குறிவைத்து, ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான குடும்பப்பெயர் எப்படி வந்தது?"என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா