
கழுதைப் பாலில் தயாரிக்கப்படும் சோப்பு பெண்களின் உடலை அழகாக வைத்திருக்கும் என்று பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவை எம்.பி.யான காந்தி, தனது தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். "கழுதை பால் சோப்பு ஒரு பெண்ணின் உடலை எப்போதும் அழகாக வைத்திருக்கும்" என்று அவர் கூறினார். எகிப்து நாட்டைச் சேர்ந்த பிரபல ராணி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிப்பது வழக்கம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மர்ம நபரின் புகைப்படம் வெளியீடு; தீவிரவாதிகளின் சதி செயலா என்ற கோணத்தில் விசாரணை!!
அவரின் இந்த கருத்து சர்ச்சையானதை அடுத்து அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மிகப் பிரபலமான ராணி, கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிப்பார். கழுதைப்பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகள் டெல்லியில் ஒரு துண்டுக்கு ரூ. 500. ஆட்டுப்பாலையும் கழுதைப்பாலையும் சேர்த்து ஏன் சோப்பு தயாரிக்கத் தொடங்கக்கூடாது? என்று கேட்டுள்ளார். மேலும் லடாக்கில் உள்ள ஒரு சமூகம் கழுதைப்பாலைப் பயன்படுத்தி சோப்புகளை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி மெட்ரோவில் 2 பெண்களுக்கு இடையே வாக்குவாதம்... வன்முறையாக மாறியதால் சக பயணிகள் அதிர்ச்சி!!
நீங்கள் கழுதையைக் கண்டு எவ்வளவு நாட்களாகிறது? எண்ணிக்கை குறைந்து வருகிறது, கழுதைகளை சலவை செய்பவர்களும் கழுதைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள். லடாக்கில் ஒரு சமூகம் உள்ளது, இது கழுதைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கவனித்ததால் அவர்கள் கழுதைப்பாலைக் கொண்டு சோப்புகளைத் தயாரிக்கத் தொடங்கினர். கழுதைப் பாலால் ஆன சோப்பு ஒரு பெண்ணின் உடலை என்றென்றும் அழகாக வைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.