லாரியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சீறிப் பாய்ந்து ஹோட்டலுக்குள் புகுந்து பல உயிர்களை பறித்துள்ளது.
மகாராஷ்டிராவின் துலேயில் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் மீது லாரி மோதியதில் 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள துலே மாவட்டத்தில் உள்ள மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலஸ்னர் கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
நண்பகலில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.கன்டெய்னர் லாரி வேகமாக வந்து சாலையில் நான்கு வாகனங்களுடன் மோதி, ஹோட்டலுக்குள்ளும் புகுந்தது. முதல்கட்டகளின்படி, ஓட்டலில் பணிபுரிபவர்கள், சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் உள்பட 15 பேர் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் பார்ட்னர் ஆக விரும்பும் சிங்கப்பூர்! 'பிளான் 5 எக்ஸ்' முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டம்
VIDEO | CCTV visuals of the accident in which at least 15 people were killed and more than 20 injured after a container truck hit four vehicles and then rammed into a hotel on the Mumbai-Agra Highway in Maharashtra's Dhule district on Tuesday. pic.twitter.com/GpgiaB9XjB
— Press Trust of India (@PTI_News)வேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரியின் பிரேக் செயலிழந்ததால், லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சீறிப் பாய்ந்திருக்கிறது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் மற்றொரு கன்டெய்னர் மீது மோதியது. அப்படியே அந்த லாரி நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த உணவகத்தின் நுழைந்தது.
குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். 20 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அப்பகுதியில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகிறார். விபத்துக்குள்ளான இந்த லாரி மத்திய பிரதேசத்தில் இருந்து துலே நோக்கி சென்றுகொண்டிருந்தது எனவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
கவனிச்சீங்களா பிரதமர் மோடி என்ன திட்டம் போட்டு இருக்கிறாருன்னு; கட்சியினருக்கு இதுதான் கட்டளை!!