சுதந்திர பேரணியில் துப்பாக்கியால் சுட்ட அமைச்சர்.. தெறித்து ஓடிய பொதுமக்கள் - வைரல் வீடியோ !

By Raghupati RFirst Published Aug 13, 2022, 5:01 PM IST
Highlights

தெலங்கானாவில் நடந்த சுதந்திர தின பேரணியில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் சுதந்திர கொண்டாட்டத்துக்கான முன்னோட்டமாக, பேரணிகள்  மற்றும் கலை நிகழ்ச்சிகள் என நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி

தெலங்கானாவில் இன்று ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் சார்பில் சுதந்திர பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுடா கலந்து கொண்டார். அப்போது அவர் துப்பாக்கியினை நடுரோட்டில் நின்று மேலே தூக்கி சுட்டார். அவர் அருகில் கட்சியினர்,பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புக்கு போலீஸ் என அனைவரும் இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !

It can only happen in ! Minister Srinivas Goud use a police weapon to fire shots during a crowded event ( top police sources say it's ILLEGAL). Twice this week, he used SLR (a prohibited bore weapon) to fire shots. I Hope initiates action. pic.twitter.com/EBVJaSBz14

— Ashish (@KP_Aashish)

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுடா, ‘ நான் சுட்டது ரப்பர் புல்லட். நான் ரைஃபில் அசோசியேஷன் மெம்பராக இருக்கிறேன். இதுகுறித்து நெட்டிசன்கள் எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

click me!