ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் மகன் உள்பட 4 பேர் காஷ்மீர் அரசுப் பணியிலிருந்து நீக்கம்

By Pothy RajFirst Published Aug 13, 2022, 2:17 PM IST
Highlights

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாலுதீன் மகன் சயத் அப்துல் முயீத், சிறையில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர் பிட்டா கராத்தே மனைவி உள்பட 4 பேர் ஜம்மு காஷ்மீர் அரசுப்பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாலுதீன் மகன் சயத் அப்துல் முயீத், சிறையில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர் பிட்டா கராத்தே மனைவி உள்பட 4 பேர் ஜம்மு காஷ்மீர் அரசுப்பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த 4 பேருக்கும் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து இவர்களை அரசுப்பணியிலிருந்து நீக்கி ஜம்மு காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

இவர்கள் 4 பேரும் அரசியலமைப்புச் சட்டம் 311வது பிரிவின்கீழ், எந்த விதமான விசாரணையும், விளக்கமும் கேட்காமல் அரசு அதிகாரிகளை நீக்க முடியும் பிரிவின் கீழ் நீக்கப்பட்டனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சலாலுதீன் மகன் சயத் அப்துல் முயீத் ஜம்மு காஷ்மீர் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை பிரிவில் மேலாளராக இருந்து வந்தநிலையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

சலாலுதீனுக்கு 3 மகன்கள். இந்த 3 மகன்களுமே, ஜம்மு காஷ்மீர் அரசுப்பணியில் இருந்தனர். இதில் ஏற்கெனவே கடந்த ஆண்டு சயத் அகமது ஷகீல், ஷாகித் யூசுப் ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இப்போது 3வது மகனும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது மத்திய அரசு அதிரடி

ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ சயீத் அப்துல் முயீத்துக்கும், ஜம்மு காஷ்மீரில்உள்ள பாம்பூரில் உள்ள செம்பரோ காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் நடந்த 3 தீவிரவாத தாக்குதலோடு தொடர்பு இருப்பதை  உளவுத்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து சயீத் அப்துல் பதவி நீக்கப்பட்டார்.

சிறையில் இருக்கும் பிரிவினைவாதி பரூக் அகமது தார் எனும் பிட்டா கராத்தேயின் மனைவி ஆஸ்பா உல் அர்ஜாமந்த்கானும் கடந்த 2011ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் நிர்வாகப்பணிக்குத் தேர்வாகினார். இவரும் தவறான தகவல்களைஅளித்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது தெரியவந்தது. இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வெளிநாட்டினர் சிலரும் தொடர்பு இருப்பதும், ஐஎஸ்ஐ அமைப்புக்கு நிதி திரட்டியதும் உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஆஸ்பா பதவி நீக்கப்பட்டார்.

பிட்டா கராத்தே கடந்த 2017ம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்துவருகிறார். தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1990களில் காஷ்மீரில் சிறுபான்மையில் பலர் கொல்லப்பட்ட வழக்கில் பிட்டா கராத்தேவுக்கு தொடர்பு உள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பும் மாற்றியது! சமூக ஊடகத்தில் சுயவிவரப் படத்தில் தேசியக் கொடி

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை கணினி அறிவியல் துறையில் மூத்த அறிவியல் வல்லுநராக இருக்கும் டாக்டர் முஹீத் அகமது பாட் என்பவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக்தில் தீவிரவாதத்தை பரப்ப முயன்றதாகவும், மாணவர்களை தீவிரவாத செயல்களுக்கு உட்படுத்துவதாகவும் தகவல் கிடைத்ததையடுத்து, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக இருந்த மஜித் ஹூசைன் குவாத்ரியும் பதவி நீக்கப்பட்டுள்ளார். இவர் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, நீக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார், இவர்மீது தீவிரவாதம் தொடர்பாக பலவழக்குகள் உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டு அங்கு மத்திய அ ரசு நிர்வாகம் ஏற்றபின் இதுவரை 40 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

click me!