காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த வாரத் தொடக்கத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டார். ஏற்கெனவே பிரியங்கா காந்தி 2 முறை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் 3-வதுமுறையாக பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 15,815 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 68 பேர் பலி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூன் மாதம் கொரோனாவில் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து குணமடைந்தார். இருப்பினும் கொரோனாவுக்கு பிந்தைய உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் ஜூன் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த சோனியா காந்தி நலம் பெற்று ஜூன் 20ம் தேதி வீடு திரும்பினார்.
அதன்பின்புதான் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகினார். சோனியா காந்தி கொரோனாவில் பாதிக்கப்படும் முன்பேஅமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்தவிசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராக இருந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது மத்திய அரசு அதிரடி
கொரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததால், அமாலக்கப்பிரிவு விசாரணையில் கூட சோனியா காந்தி நீண்ட நேரம் விசாரிக்கப்படவில்லை. அவரின் வயது, உடல்நிலை கருதி விசாரணை சுருக்கமாகவே முடிந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்கேரா உள்ளிட்ட சிலருக்கும் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, பிரியங்கா காந்தி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தசூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2 மாதங்களுக்குள் 2 வது முறையாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
10 நாட்களில் ஒரு கோடி தேசியக் கொடி விற்று இந்தியா போஸ்ட் சாதனை
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இன்று உறுதி செய்யப்பட்டது. அரசின் பாதுகாப்பு விதிகளின்படி சோனியா காந்தி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.