நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும்,தனது சமூக ஊடக கணக்கில் சுயவிவரப் படம்(profile picture) தேசியக் கொடியை வைத்தது.
நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும்,தனது சமூக ஊடக கணக்கில் சுயவிவரப் படம்(profile picture) தேசியக் கொடியை வைத்தது.
இந்த தேசம், 75-வது சுதந்திரதினமா ஆசாத் கா அம்ரித் மகாத்சவத்தை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இன்று முதல் 15ம் தேதிவரை தேசியக் கொடி ஏற்றி, தேசப்பற்றை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது மத்திய அரசு அதிரடி
மேலும் சமூக ஊடகக் கணக்கு வைத்திருப்போரும் தங்களின் டிபி-படத்தில் தேசியக் கொடியின் படத்தை வையுங்கள் எனக் கேட்டிருந்தார்.
இதையடுத்து, ஏராளமான பிரபலங்கள், 75வதுசுதந்திரதினத்தை முன்னிட்டு, தங்களின் சமூக ஊடகக் கணக்கின் டிபி புகைப்படத்தில் தேசியக் கொடியின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி அறிவுறுத்தியபோதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மட்டும் தங்களின் டிபி-புகைப்படத்தில் தேசியக் கொடியை வைக்காமல் இருந்தது குறித்து காங்கிரஸ்கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது. மற்ற எதிர்க்கட்சிகளும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை கண்டித்திருந்தனர்.
‘இந்தியா ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்’: பேஸ்புக் பதிவால் சர்ச்சையில் சிக்கிய கேரள எம்எல்ஏ
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “52 ஆண்டுகளாக நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத ஆர்எஸ்எஸ் அமைப்பு, சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரப் படமாக தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பரப்பிரிவு பொறுப்பாளர் நரேந்திர குமார் தாக்கூர் கூறுகையில் “ ஆர்எஸ்எஸ் அமைப்பு சுதந்திரத்தினத்தை கொண்டாட உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவோம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு ‘புல்லட் ப்ரூப்’ வழங்கப்படுகிறதா?
முன்னதாக, ஆர்எஸ்எஸ் விளம்பரப்பிரிவு தலைவர் சுனில் அம்பேகர் “ஆர்எஸ்எஸ் தனது சமூக ஊடகக்கணக்கில் சுயவிவரப் படத்தில் தேசியக் கொடி வைக்காததை அரசியலாக்கக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.