
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கானத் தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி நடந்துவருகிறது. மக்கள் ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. 28.13 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த உள்ளனர். இதற்காக மாநிலம்முழுவதும் 3,337 வாக்குப்பதிவு மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
திரிபுரா சட்டசபை தேர்தல் 2023: தலை தூக்குமா சிபிஐ(எம்)? பாஜக தலைவர்களை அலற வைத்த தேப்பர்மா!!
மொத்தமுள்ள 60 சட்டசபைத் தொகுதிகளில் 259 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பாஜக 55 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திரிபுராவில் எதிர்துருவங்களாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதலில் வாக்காளர்கள் குறைந்த அளவில் வந்து வாக்கைச் செலுத்தினர். ஆனால், நேரம் செல்லச் செல்ல வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தலைமைத்தேர்தல் அதிகாரி கிட்டி கிரண்குமார் தினகர்ராவ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மாணிக் சாஹா, பர்தோவாலி தொகுதியில் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு தொடங்கியதும் விரைவாக வந்து பர்தோவாலி நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து வாக்கைச் செலுத்தினார்.
வாக்குப்பதிவு தொடங்கி முதல் ஒரு மணிநேரத்துக்குள் வாக்கு எந்திரம் பழுது தொடர்பாக எந்தப் பிரச்சினையும்இல்லை, எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. மொத்தமுள்ள 3,337 வாக்குப்பதிவு மையங்களில் 1100 மையங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. 28 மையங்கள், மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?
97 வாக்குப்பதிவு மையங்களை பெண்கள் மட்டும் நிர்வகிக்கிறார்கள். தேர்தலுக்கு எந்தவிதமான தொந்தரவும், இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக உள்நாட்டு எல்லைகள், சர்வதேச எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன. தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை வரை தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர்.
வாக்களிப்பவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் கூட்டமாக நிற்கவோ, செல்லவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் கூறுகையில் “ 31000 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 25 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர பதற்றமான இடங்களில் தீத்தடுப்பு பிரிவினர், கலவரத்தை அடக்கும் பிரிவினர், உள்ளனர். சட்டம்ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 31 ஆயிரம் ஆயுதப்படையினர் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவசர உதவிக்காக ஏர்ஆம்புலன்ஸும் தயாராக வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
பிபிசி சேனல் இதற்கு முன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா? காங்கிரஸ் கதறுவது நியாயமா?
இந்த முறை திரிபுராவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக-ஐபிஎப்டி கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. எதிர்துருவங்களாக இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகூட்டணி சேர்ந்து பாஜகவை வீழ்த்த களமிறங்கியுள்ளன. மாநில கட்சியான திப்ரா மோத்தா கட்சியும் களத்தில் உள்ளது.
பாஜக 55 தொகுதிகளிலும், ஐபிஎப்டி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இடதுசாரிகள் 47 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 28 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர சுயேட்சைகள் 58 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல் முடிந்து மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைநடக்கிறது