பிளாஸ்டிக் அரிசி எப்படி இருக்கும்... இதோ க்ளு...

Asianet News Tamil  
Published : Jun 08, 2017, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
பிளாஸ்டிக் அரிசி எப்படி இருக்கும்... இதோ க்ளு...

சுருக்கம்

Tricks and Tips How to Identify Plastic Rice or Fake Rice at home

நாட்டில் சமீப காலங்களாக மேற்குவங்காளம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்றவற்றை சந்தையில் சிலர் புழக்கத்துக்கு விட்டுள்ளனர். இது  மக்களுக்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது.

 சுத்தமான, இயற்கையில் விளைவிக்கப்பட்ட அரிசியைப் போல் மாற்றப்பட்டு, கலப்படம் செய்யப்பட்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடைகளில் விற்கப்படுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. இதனால், மக்கள் மத்தியில் பெரிய பீதியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த அரிசியை சாப்பிட்டு சிலருக்கு உடல் நலக்கோளாறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா அரசுகள் பலசரக்கு, மற்றும்அரிசி கடைகளில் உணவுப்பாதுகாப்பு அதிகாரளைக் கொண்டு தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

உணவுப் பொருட்கள் என நினைத்து காசு கொடுத்து வாங்கி, மக்கள் உடல்நலக்கேட்டை வரவழைத்துக் கொள்கின்றனர். யாரும் இதை தெரிந்து செய்வதில்லை. போலியை, உண்மைபோல் மாற்றும்போது அனைவரும் ஏமாறுவது இயல்புதான்.  

இந்த பிளாஸ்டிக் அரசியின் சதிக்குள் நாமும் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும். பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து தெரிந்து கொண்டால் அந்த அரிசியை நாமும் தவிர்த்து விடலாம்.  இதே 5 எளிய வழிமுறைகள்.

பிளாஸ்டிக் அரிசி என அரிசி மீது சந்தேகம் வந்துவிட்டால், ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அதை ஒரு பேப்பரில் வைத்து தீயிட்டு கொளுத்துங்கள். அந்த அரிசியின் துகள்கள் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு இருந்தால், அது உருகத்தொடங்கி பிளாஸ்டிக் மணம் வரும். இல்லாவிட்டால், உண்மையான அரிசியாக இருந்தால், அப்படியே இருந்து கருகி இருக்கும்.

சாதாரண அரிசியை குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ வேகவைத்து வடித்து அதை எடுத்து ஒரு பாட்டிலில் 2 முதல் 3 நாட்களுக்கு வைத்தாலும் அதில் பூஞ்சை பிடிக்காது. ஆனால், பிளாஸ்டிக் அரிசியை இதுபோல் வேகவைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு 2 அல்லது 3 நாட்களுக்கு பின் பார்த்தால் பூஞ்சை பிடித்துவிடும்.

கொதிக்கும் எண்ணையில் சாதாரண அரிசியை எடுத்துப் போட்டால், அது பொறியும். ஆனால், பிளாஸ்டிக் அரிசியை எடுத்து எண்ணெயில் போட்டால், அந்தஅரிசி உருகி திரள் திரளாக நிற்கும். அப்போது கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் சாதாரணஅரிசியை ஒரு கைப்பிடி எடுத்துப்போட்டால், அனைத்து அரிசியும் கீழாகச் சென்றுவிடும். ஆனால், பிளாஸ்டிக் அரிசியைப் போட்டால், அந்த அரிசி தண்ணீரில் மூழ்காமல், மேற்பரப்பிலேயே மிதக்கும். அப்படிமிதந்தால், பிளாஸ்டிக்அரிசி என கண்டுபிடித்து விடலாம். இயற்கையாக விளைவிக்கப்பட்ட  அரிசி தண்ணீரில் மிதக்காது.

பிளாஸ்டிக் அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கும் போது, அது ஒரு கெட்டியான படலம் போல் அல்லது பாலாடை போல் பாத்திரத்தின் மேற்பகுதியில் வரும்.ஆனால், உண்மையான அரிசியில் அதுபோல் வராது. 
 

PREV
click me!

Recommended Stories

El Nino : கடவுளையும் விட்டு வைக்காத எல் நினோ! உருகும் அமர்நாத் பனி லிங்கம்!
Snake Facts: பாம்புகளுக்கு மனுஷங்களை அடையாளம் தெரியுமா? விஞ்ஞானிகள் சொல்ற ஷாக்கிங் ரிப்போர்ட்!