
கேரளாவில் மதுவிலக்கை வாபஸ் பெற மாநில அமைச்சரவை முடிவு செய்ததையடுத்து மூடப்பட்டிருந்த 730 பார்கள் திறக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு உம்மன்சாண்டி முதலமைச்சராக இருந்தபோது ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு குறைவாக உள்ள ஓட்டல்களில் மதுபான கடை மூடப்பட்டது.
மேலும் பத்து வருடங்களில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இதில் மதுவிலக்கை அமல்படுத்தியதால் கேரள அரசுக்கு வருவாய் மிகவும் பின்தங்கியதாகவும் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை கஞ்சா போன்ற மிகவும் கொடிய வகை பழக்கங்களுக்கு ஆளாவதாகவும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுவிலக்கை ரத்து செய்து கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த ரத்தால் மூடப்பட்டிருந்ததால்730 மதுபான கடைகள் உடனே திறக்கப்பட்டன.
கேரளா அமைச்சரவையின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிப்பு தெரிவித்துள்ளது.