
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது எனவும், தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் அந்த அமைப்பின் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்து சேனா அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் அவரை தாக்க முயற்சி செய்தனர்.
இதையறிந்த அங்கு இருந்தவர்கள் தாக்க முயன்றவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதல் முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது எனவும், தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் அந்த அமைப்பின் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.