
டெல்லி அரசுப்பேருந்துகளில் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் நள்ளிரவுக்கு மேல் பனிப்பொழிவும் உள்ளதால் கடந்த 4 நாட்களாக காற்றில் மாசு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் நிலைமை மோசம் அடைந்ததால் மெல்லிய போர்வை போன்ற அடர்த்தியான மாசு நகரை சூழந்து இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு காற்றில் பறந்த மாசுவால் தொடந்து 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து விபத்திற்குள்ளாகின.
இதையடுத்து காற்று மாசு காரணமாக இதர வாகனங்களின் செயல்பாட்டை குறைப்பதற்காக நவம்பர் 13 ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இலவசமாக பயணிக்கலாம் என கைலாஷ் கஹ்லோட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சென்னையில், கடந்த ஆண்டு வெள்ளம் வந்த போது அனைத்து மக்களும் கடும் பாதிப்புகளுக்கும் சிரமத்திற்கும் ஆளாகினர். இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே சென்னையில் ஓடின. இதையடுத்து வாகன போக்குவரத்து தட்டுப்பாட்டை குறைக்க அனைத்து பேருந்துகளிலும் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம் என அரசு உத்தரவிட்டது.
அப்போது தமிழ்நாடு பயன்படுத்திய அதே ஃபார்முலாவை டெல்லி தற்போது நடைமுறை படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.