177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு..! 50 பொருட்களுக்கு மட்டுமே 28% வரி..! ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு..!

Asianet News Tamil  
Published : Nov 10, 2017, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு..! 50 பொருட்களுக்கு மட்டுமே 28% வரி..! ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு..!

சுருக்கம்

gst tax rate reduce for 177 items

177 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த வரியும் ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்ச வரியும் விதிக்கப்பட்டுள்ளது. சில சொகுசு பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டரின் உதிரி பாகங்களுக்கு 28% வரி, ஜவுளி பொருட்களுக்கு 28% வரி மற்றும் கடலைமிட்டாய், கருவாடு ஆகியவற்றின் மீதான அதிகமான வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

இதுவரை 227 பொருட்கள் அதிகபட்ச வரியான 28% விதிப்புக்குள் உள்ளன. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளும் பல மாநிலங்களும் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து இதுதொடர்பாக ஆய்வுசெய்த துணைக்குழு, 166 பொருட்களின் மீதான வரியை குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், குவாஹத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட 23-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் 177 பொருட்களின் மீதான அதிகபட்ச வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 50 பொருட்களை மட்டுமே அதிகபட்சமான 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 28%லிருந்து 18%ஆக வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்கள்:

* டிராக்டரின் உதிரிபாகங்கள்
* சேவிங் கிரீம்
* சாக்லேட்டுகள்
* ஷாம்பூ
* பெண்கள் உபயோகப்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள்
 * கிரானைட், மார்பிள்ஸ்

ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான வரி 18%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செங்கல் தொழில் சார்ந்த சில்லறை வேலை சேவை மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 

ஏசி அல்லாத ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5% வரியை 1%ஆக குறைக்க வேண்டும் எனவும், ஏசி ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை 12%ஆக குறைக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.

எனவே ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்ட வரியும் குறைக்கப்பட்டிருக்கலாம். வரிவிகிதம் குறைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விவரங்கள் முழுவதுமாக இதுவரை கிடைக்கவில்லை. இன்று இரவிற்குள் மொத்த விவரமும் கிடைத்துவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

Gujarat Crocodile Bridge: உயிரியல் பூங்கா சஃபாரியை மிஞ்சும் புதிய அனுபவம்; குஜராத்தில் உருவாகும் பிரமாண்ட முதலைப் பாலம்!
Tirupati 121 Kg Gold Donation: திருமலை கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை; யார் இந்த வர்தமான் ஜெயின்?