மாறன் சகோதரர்களை தப்ப விடாத சிபிஐ... - வழக்கில் இருந்து விடுவிக்க கடும் எதிர்ப்பு...

 
Published : Nov 10, 2017, 11:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
மாறன் சகோதரர்களை தப்ப விடாத சிபிஐ... - வழக்கில் இருந்து விடுவிக்க கடும் எதிர்ப்பு...

சுருக்கம்

According to sources Maran had filed a criminal complaint against the brothers and the BSNL. The CBI has also said that it should not be released from the case.

ஆதாரஙகளின் அடிப்படையிலேயே மாறன் சகோதரர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ததாகவும் அவர்களை பிஎஸ்.என்.எல். வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது எனவும் சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலை வீடுகளில் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாகவும், இவற்றை சன்டிவிக்கு பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

உச்ச நீதிமன்ற வழக்கின் காரணமாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலெக்ட்ரீசியன் கே.எஸ்.ரவி, சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கௌதமன் ஆகியோரை கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர். 

இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிக்கை நகலை தயாநிதிமாறனும், கலாநிதிமாறனும் பெற்று கொண்டனர். 

இதையடுத்து இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு மாறன் சோகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

இந்நிலையில், ஆதாரஙகளின் அடிப்படையிலேயே மாறன் சகோதரர்கள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ததாகவும் அவர்களை பிஎஸ்.என்.எல். வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது எனவும் சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் மாறன் சோகோதரர்கள் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எல்லா சட்டத்துக்கும் இந்தி பெயர்.. இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் பாஜக.. ப.சிதம்பரம் காட்டம்!
டெல்லி காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம்! பகீர் கிளப்பும் நாசா கண்டுபிடிப்பு!