ஒரு மாதத்துக்குள் ‘ஜியோ’வின் அதிரடி சலுகை - ‘பிரைம்’ உறுப்பினர்களுக்கு 3 மடங்கு ‘கேஷ் பேக்’ ஆஃபர்

 
Published : Nov 09, 2017, 10:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ஒரு மாதத்துக்குள் ‘ஜியோ’வின் அதிரடி சலுகை - ‘பிரைம்’ உறுப்பினர்களுக்கு 3 மடங்கு ‘கேஷ் பேக்’ ஆஃபர்

சுருக்கம்

Geo Prime members Rs. If you recharge from Rs 399 to Rs.2599 they will have 100 cashback

ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ரூ. 399 முதல் ரூ.2,599 வரை ரீசார்ஜ் செய்தால், அவர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் (பணம் திருப்பி அளித்தல்) சலுகை அளிக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் தீபாவளிப்பண்டிகை வந்தபோது ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கேஷ்பேக் சலுகை அளிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு மாதத்துக்குள் மூன்றுமடங்கு கேஷ்பேக் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை இம்மாதம் 10ந்-தேதி முதல் 25-ந்-தேதி வரை பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த அறிவிப்பின்படி, பிரேம் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால், அவரின் கணக்கில் 8 தவனைகளாக ரூ.50 பரிமாறப்படும். அடுத்து, ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும்போது, அந்த ரூ. 50 கழித்துக்கொள்ளப்படும். இதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு மொபைல் வாலட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், பேடிஎம், மொபிவிக், அமேசான் பே, ஆக்சிஸ் பே, போன்பி, ப்ரீ-சார்ஜ் ஆகியவற்றின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்கள் அதிகபட்சமாக ரூ.300 வரை கேஷ்-பேக் பெறமுடியும். மீதமுள்ள தொகை அவர்களின் இ-வாலட்டுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்பி வைக்கப்படும்.

புதிய ஜியோ வாடிக்கையாளர்கள் பேடிஎம், மொபிவிக், அமேசான் பே, ஆக்சிஸ் பே, போன்பி, ப்ரீரீசார்ஜ் ஆகியவற்றின் மூலம்ரீசார்ஜ் செய்பவர்கள் ரூ. 300, ரூ.100, ரூ.99, ரூ.75, ரூ.50 என கேஷ்பேக் பெற முடியும். ஏற்கனவே இருக்கும் ஜியோவாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால், ரூ.149, ரூ.35, ரூ.20, ரூ.15 என கேஷ் பேக் பெறலாம்.

மீதமுள்ள கேஷ்பேக் கூப்பன்கள் இணையதளத்தில் ரூ. 1,899க்கு பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில், ஷாப்பிங்கூப்பன்களாக தரப்படும். இந்த கூப்பன்கள் அஜியோ.காம், ரிலையன்ஸ் டிரன்ட்ஸ்.காம். யாத்ரா.காம் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும். 

PREV
click me!

Recommended Stories

பால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!