கேரளாவில் திடீரென 1 கி.மீ. தூரம் ரிவர்சில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்!

Published : May 22, 2023, 09:41 PM ISTUpdated : May 22, 2023, 09:42 PM IST
கேரளாவில் திடீரென 1 கி.மீ. தூரம் ரிவர்சில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்!

சுருக்கம்

கேரளாவில் வேணாடு எக்ஸ்பிரஸ் ரயில் சேரியநாடு நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், சுமார் ஒரு கிலோமீட்டர் வந்த வழியிலேயே ரிவர்சில் சென்றது.

கேரள மாநிலம் சொர்னூர் நோக்கிச் சென்ற வேனாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு சிறிய நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், சுமார் ஒரு கி.மீ. தூரம் ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் குழப்பத்துக்கு ஆளானார்கள்.

ஆலப்புழாவில் சேரியநாடு நிறுத்தத்தில் திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து வேணாடு செல்லும் வேணாடு எக்ஸ்பிரஸ் ரயில் சேரியநாடு நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. மாவேலிகரா மற்றும் செங்கனூர் நிலையங்களுக்கு இடையே உள்ள சேரியநாடு ஸ்டேஷன் ஒரு 'D கிரேடு ஸ்டேஷன்' ஆகும்.

"செரியநாட்டில் சிக்னல் கிடையாது. பெரிய ஸ்டேஷன்களில் மட்டுமே சிக்னல்கள் இருக்கும். இதனால், ரயிலை ஓட்டிச் சென்ற லோகோ பைலட்கள் (ஓட்டுனர்கள்) தவறு செய்திருக்கலாம். ஆனால், ரயில் சில மீட்டர் தூரம் கடந்த சென்றபோதே அவர்கள் அதைக் கவனித்தனர்" என ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

கண்ணூரில் தன் பள்ளி ஆசிரியரிடம் ஆசி பெற்ற துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

உடனே ரயிலை நிறுத்த முடியாததால், சில நூறு மீட்டர்கள் முன்னே சென்றுவிட்டது. "வேணாடு எக்ஸ்பிரஸ் சில நூறு மீட்டர்கள் ஓடிய பின்னரே நிறுத்தப்பட்டது. அதனால்தான் 700 மீட்டர் தூரம் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், குறித்த நேரத்தைவிட சுமார் எட்டு நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. ஆனால் ஓட்டுநர்கள் பின்னர் அதைச் சரிசெய்துகொண்டனர்" என்றும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

இதனால் பயணிகள் யாருக்கும் எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே கூறுகிறது. ரயில் மீண்டும் சேரியநாடு நிறுத்தத்துக்கு திரும்பிய பிறகு, காத்திருந்த பயணிகள் வழக்கம்போல எந்த ஏறவும் இறங்கவும் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருசில பயணிகள் மட்டுமே இருந்தனர்.

இதுகுறித்து அனைத்து கேரள ரயில்வே பயணிகள் சங்கத்தின் தலைவர் பால் மண்வட்டம் கூறுகையில், "ரயில் நிற்காமல் செல்வதைப் பார்த்த பயணிகள் இடையே சிறிது குழப்பம் ஏற்பட்டது. ஆனால் இது ஒரு சிறிய சம்பவம்தான். பெரிதாக எதுவும் பிரச்சினை இல்லை" என்றார்.

Mount Etna Eruption: இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும் மவுண்ட் எட்னா! எரிமலை வெடிப்பால் விமானங்கள் ரத்து

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!