
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாட்னாவில் இருந்து இந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்தவர்களில் முதலில் 65 பேரின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டனர். தற்போது பலி எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.