
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாட்னாவில் இருந்து இந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள்தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 65 பேர் பலியாகினர்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில்,
பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மோடி, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்து மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வரும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசி உள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.