
கடந்த 8ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்த்தித்து வருகின்றனர்.
பண தட்டுப்பாட்டால் திருமணமும் நடத்த முடியவில்லை என பல்வேறு புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, திருமணத்திற்காக வங்கிகளில் இருந்து ஒரு கணக்கில் இருந்த மட்டும் ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நடைமுறை நாளை முதல் அனைத்து வங்கி கிளைகளிலும் அமலுக்கு வர உள்ளது.
திருமணத்திற்கு பணம் எடுப்போர் திருமணம் செய்து கொள்பவர் அல்லது அவர்களின் பெற்றோர் யாராவது ஒருவர் மட்டுமே பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாப்பிள்ளை வீட்டார் ரூ.2.5 லட்சமும், பெண் வீட்டார் ரூ.2.5 லட்சமும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.