இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்
மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
அந்த பதிலில் கூறியிருப்பதாவது: “2024, ஜனவரி 31 நிலவரப்படி, 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன. இவை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட கட்டமைப்புக் கொண்ட மாநிலங்களை இணைக்கின்றன. இது தவிர, ரயில் சேவைகளை நிறுத்துவது, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை இந்திய ரயில்வேயில் நடந்து வரும் செயல்பாடுகளாகும்.
நாட்டை பிளவுபடுத்தும் காங்கிரஸ்: பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு!
தற்போது டெல்லி-மும்பை (வதோதரா-அகமதாபாத் உட்பட) மற்றும் டெல்லி-ஹவுரா (கான்பூர்-லக்னோ உட்பட) வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டருக்கு அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், தானியங்கிக் கதவுகள், சாய்வு இருக்கைகள், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் சுழலும் இருக்கைகள், ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் சாக்கெட்டுகள் போன்ற பயணிகள் வசதிகளுடன் தற்போது இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு கவச் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!
பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும், வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத் ரயில் என்பது உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும், இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகவும், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் தானியங்கி கதவுகள், பயோ-வெற்றிட கழிப்பறைகள் மற்றும் வைஃபை போன்ற அம்சங்களும் உள்ளன.