இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 31.05.2023

By Dinesh TGFirst Published May 31, 2023, 7:59 AM IST
Highlights

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 31.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.
 

தமிழகத்தில் கருணாநிதியின் பெயர் பேசப்படும் வகையில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார். ஆனால் அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்தாமல் மறுத்து வருவதுதான் வேதனையாக உள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு கூறியுள்ளது.

கருணாநிதியின் அரசாணை 354

 

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடிவரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிவோம் எனக் கூறினர். பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகள்

சர்க்கரையை எறும்பு தின்னுச்சு சொன்ன திமுக அரசு, 7 ஆயிரம் டன் நெல் மாயத்திற்கு என்ன சொல்ல போகுதோ? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில், மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் அவருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியுடன் நிழல் போல இருப்பவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். அவர் முக்கிய கொள்கைகளை வழிநடத்துவதில் சளைக்காமல் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

அஜித் தோவல்

ரிசர்வ் வங்கி ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்ததை அடுத்து, புழக்கத்தில் இருந்த சுமார் 20% நோட்டுகள் தங்களிடம் வந்துவிட்டதாக ஸ்டேட் வங்கி சொல்கிறது.

2,000 ரூபாய் நோட்டு

மல்யுத்த வீராங்கனைகள் மீது போலீஸார் அடக்குமுறையை ஏவி வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை சாடியுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாதது ஏன்? மம்தா கேள்வி!!

மம்தா கேள்வி!!

இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து முன்னனி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள 9 முக்கியத் திட்டங்கள் பற்றிய தொகுப்பு

பிரதமர் மோடி
 

click me!