மக்களவை தேர்தலில் அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
நாட்டில் தற்போது தேர்தல் காலம் வந்துவிட்டது. தேர்தல் என்றால். வாக்குகளைப் பற்றியது மட்டுமல்ல, பெரும் பணத்தைப் பற்றியது. நமது அரசியல்வாதிகளில் சிலர் எவ்வளவு பணக்காரர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மக்களவை தேர்தலில் அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
நகுல் நாத் (காங்கிரஸ், சிந்த்வாரா, மத்தியப் பிரதேசம்)
undefined
கமல்நாத்தின் மகனான நகுல்நாத் ஒரு வளமான அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர். 2019 இல் தனது தந்தையிடமிருந்து சிந்த்வாரா தொகுதியை கைப்பற்றிய நகுல், சவாலான நேரங்கள் இருந்தபோதிலும் கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டார். அவர் ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல், சொகுசு ஹோட்டல்கள் என பல தொழில்களை நடத்தி வருகிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 716 கோடி ஆகும்.
அசோக்குமார் (அதிமுக, ஆரணி, தமிழ்நாடு)
அதிமுகவை சேர்ந்த அசோக் குமார் 662 கோடி மதிப்பிலான சொத்துகளுடன், பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.. ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி என பல துறைகளில் அவர் தொழில் நடத்தி வருகிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 662 கோடி.
பிரஜ்வல் ரேவண்ணா குற்றச்சாட்டுக்கு டி.கே.சிவக்குமார் பதில்!
டி.நட்ராஜன் யாதவ் (பாஜக, சிவகங்கை, தமிழ்நாடு)
சிவகங்கையில் போட்டியிடும் டி.நட்ராஜன் யாதவ், பாஜகவின் முக்கிய வேட்பாளர். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை அவர் நடத்தி வருகிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.304 கோடி ஆகும். இந்த நிதி ஆதாரங்கள் தமிழக அரசியலில் அவரது பிரச்சாரத்தையும் செல்வாக்கையும் வலுப்படுத்துகின்றன.
மாலா ராஜலட்சுமி ஷா (பாஜக, தெஹ்ரி கர்வால், உத்தரகண்ட்)
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாலா ராஜலட்சுமி ஷாவின் சொத்து மதிப்பு ரூ.206 கோடி. அவரின் வருவாய் விவசாயம் மற்றும் சுற்றுலாவில் குடும்ப வணிகங்களில் இருந்து உருவாகிறது, இது அவரது அரசியல் செல்வாக்கையும் பிராந்திய செல்வாக்கையும் மேம்படுத்துகிறது.
மஜித் அலி (பிஎஸ்பி, சஹாரன்பூர், உத்தரபிரதேசம்)
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பிஎஸ்பி சார்பில் போட்டியிடும் மஜித் அலி ரூ.159 கோடி சொத்து மதிப்பை அறிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் அவர் முதலீடு செய்து வருகிறார்.
ஏ.சி.சண்முகம் (பாஜக, வேலூர், தமிழ்நாடு)
தமிழகத்தின் வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனது சொத்து மதிப்பு ரூ.152 கோடி என தெரிவித்துள்ளார். சண்முகத்தின் நிதி பலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இருந்து வருகிறது.
ஜெயபிரகாஷ் (அதிமுக, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு)
அதிமுக வேட்பாளரான ஜெயபிரகாஷ் தனக்கு மொத்தம் ரூ.135 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.. விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை அவர் நடத்தி வருகிறார்.
வின்சென்ட் எச். பாலா (காங்கிரஸ், ஷில்லாங், மேகாலயா)
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வின்சென்ட் எச்.பாலா ரூ.125 கோடி சொத்து வைத்துள்ளார். அவரது செல்வம் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தொழில்களில் இருந்து வருகிறது,
ஜோதி மிர்தா (பாஜக, ராஜஸ்தான்)
ராஜஸ்தானில் இருந்து பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா 102 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். அவரது செல்வம், சுரங்கம் மற்றும் விவசாயத்தில் இருந்து உருவானது,
கே.டி.ஜலீல் (காங்கிரஸ், மலப்புரம், கேரளா)
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.டி.ஜலீலின் சொத்து மதிப்பு ரூ.96 கோடி. அவர் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் வணிகங்களை நடத்தி வருகிறார்.