Hurun India அமைப்பு 2023-ம் ஆண்டிற்கான சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8.08 லட்சம் கோடிக்கு மேல் மொத்த சொத்து மதிப்புடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
உலகளவில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. பொருளாதார ரீதியில் பல நாடுகள் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. இதனால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதாவது ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் Hurun India அமைப்பு 2023-ம் ஆண்டிற்கான சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8.08 லட்சம் கோடிக்கு மேல் மொத்த சொத்து மதிப்புடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த பட்டியலில் கௌதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். தற்போது 4.74 லட்சம் கோடியாக இருக்கும் அதானியின் சொத்து மதிப்பு, ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து ஓராண்டில் 57 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் HCL இன் ஷிவ் நாடார் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய பில்லியனர் கோபிசந்த் ஹிந்துஜா ஆகியோர் பணக்காரர்கள் பட்டியலில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் நகரம் வாரியாக எந்த நகரத்தில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கின்றனர் என்ற பட்டியலையும் Hurun India வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் பொருளாதார தலைநகராக அறியப்படும் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில் ரூ. 1000 கோடிக்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட 328 பெரும்பணக்காரர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
199 பெரும் பணக்காரர்களுடன் இந்த பட்டியலில் நாட்டின் தலைநகரான டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் பெங்களூரு இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு 100 பெரும் பணக்காரர்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
87 பெரும் பணக்காரர்களுடன் ஹைதராபாத் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சென்னை 5-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் மொத்தம் 67 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து 55 பெரும் பணக்காரர்களுடன் அகமதாபாத் 6-வது இடத்தில் உள்ளது. 51 பெரும் பணக்காரர்களை கொண்ட கொல்கத்தா இந்த பட்டியலில் 7-வது இடத்திலும், 39 பெரும் பணக்காரர்களுடன் புனே 8-வது இடத்திலும் உள்ளது. 27 பெரும் பணக்காரர்களை கொண்ட சூரத் இதில் 9-வது இடத்திலும், 18 பெரும் பணக்காரர்கள் கொண்ட குருகிராம் 10-வது இடத்திலும் உள்ளது.
சென்னையை தவிர மேலும் 2 தமிழக நகரங்களும் டாப் 20 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. அதன்படி கோவை 12-வது இடத்தில் உள்ளது. கோவையில் 16 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். அதே போல் திருப்பூர் இந்த பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது. திருப்பூரில் 7 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் திருப்பூர் இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.