ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மக்கள் தங்கள் தாய்நாட்டின் மீது பக்தி, அன்பு மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
'பாரதம்' 5,000 ஆண்டுகளாக மதச்சார்பற்ற தேசமாக உள்ளது என்றும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உலகிற்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மூத்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரங்கா ஹரி எழுதிய 'பிரித்வி சூக்தா' என்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மோகன் பகவத், மக்கள் தங்கள் தாய்நாட்டின் மீது பக்தி, அன்பு மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் பணியைத் தொடங்கிய வெளியுறவுத்துறை
"நமது நாடு 5,000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரம் கொண்டது, மதச்சார்பற்றது" என்று கூறிய அவர், "நாட்டில் எவ்வளவோ பன்முகத்தன்மை உள்ளது. ஒருவருக்கொருவர் சண்டையிடாதீர்கள். உலகிற்கு நாம் அனைவரும் ஒன்று என்று கற்பிக்கும் திறனை உருவாக்குங்கள்" என்று அவர் கூறினார்.
உலக நலனுக்காக சன்யாசிகள் 'பாரதத்தை' உருவாக்கினார்கள் என்ற திரு பகவத், அவர்கள் தங்கள் அறிவை நாட்டின் கடைசி நபர் வரை கடத்தும் சமுதாயத்தை உருவாக்கினர் என்றார். "அவர்கள் சன்யாசிகள் மட்டும் அல்ல. அவர்கள் குடும்பத்துடன் அலைந்து திரியும் வாழ்க்கை வாழ்ந்தார்கள். இவர்கள் அனைவரும் இன்னும் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை பழங்குடியினர் என்று கூறினர்" என்றும் மோகன் பகவத் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
ஜி20 மாநாட்டை இந்தியா மனிதநேயத்தைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பாக மாற்றியதில் ஆச்சரியமில்லை என்றும் மோகன் பகவத் கூறினார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானும் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், ஒற்றுமையே இந்தியாவின் மிகப்பெரிய இலட்சியம் என்று வலியுறுத்திப் பேசினார்.
ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு! மத்திய அரசின் திட்டத்தில் சேர விண்ணப்பிப்பது எப்படி?