"அப்பாடா..!!! நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்குமாம்" - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Dec 18, 2016, 09:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
"அப்பாடா..!!! நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்குமாம்"  - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சுருக்கம்

நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள், அனைத்து வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

முதன்முறையாக நட்சத்திர குறியீடு பதிப்பிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் மார்க்கெட்டில் விநியோகிக்கப்படுகின்றன. இவை 100 நோட்டுகள் கொண்ட கட்டுக்குள் சீரியல் வரிசைப்படி இருக்காது.

இது போன்ற 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இதனிடையே வாரத்திற்கு 24,000 ரூபாய் என்ற வரம்பைத் தளர்த்துவது குறித்தும் வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

அச்சடித்த புதிய பணம் கைக்கு வராமல் தட்டுப்பாடு நீடிப்பதால் தற்போது குறிப்பிட்ட 24,000 ரூபாயை கூட வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக கொடுக்க வங்கிகளால் முடியவில்லை.

ஆனால் அடுத்த வாரத்துக்குள் புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் முதலீடு செய்யப்படுவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள வரம்பை தளர்த்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Indian Railways: ரயில் டிக்கெட் Screenshot, PDF இனி செல்லாதா? உண்மை என்ன? ரயில்வேயின் புதிய விளக்கம்
Floating Cylinders : வெள்ளத்தில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்! வைரலாகும் பகீர் வீடியோ!