
மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஜிஎஸ்டி மசோதாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதா கொண்டு வந்தால், பல்வேறு சோதனைச்சாவடிகள் மூடு விழா கொண்டாடும் என மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியாவது:-
ஜிஎஸ்டி மசோதா நமது நாட்டில் கொண்டு வந்தால், கால்நடை வளர்ப்பு, சுரங்கம் மற்றும் வனம் தொடர்பான சோதனை சாவடிகள் மூடப்படும். காரணம், இவற்றை நடத்துவது காலத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும்.
ஜிஎஸ்டி வரி முறை சுமார் 165 ஆண்டுகளாக உலகில் உள்ளது. முதன் முதலில் பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்டு, நடைமுறைக்கு வந்தது.
ஜி எஸ் டி வரி முறை நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு சில சோதனைச்சாவடிகளே மட்டும் எப்போதும் போல செயல்படும். ஏனென்றால், ஜிஎஸ்டி வரிமுறையின் கீழ் பெரும்பாலான துறைகள் வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.