
அசாம் மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதன் அருகில் உள்ள மாநிலமான மேகாலயாவின் எல்லைப்பகுதியையும் பதற்றமான பகுதியாக தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உல்பா, என்டிஎப்பி ஆகிய அமைப்புக்களின் வன்முறை அதிகரித்துள்ளது.
இதனால், இந்த மாநிலம் அடுத்த 3 மாதங்களுக்கு பதற்றமான மாநிலமாக, மத்திய அரசுஅறிவித்துள்ளது.
மேலும், இந்த மாநிலத்தை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்து.
கடந்த 2016ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்ததன.
அதில் 4 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 33 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் கடத்தப்பட்டனர் என தெரிகிறது.
மேலும், நடப்பாண்டில் 9 வன்முறை சம்பவங்கள் நடந்துளளன. இதில், பாதுகாப்பு அதிகாரிகள் 2 உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.