Gyanvapi Masjid:Varanasi:வாரணாசி கியான்வாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு:144 தடை உத்தரவு; விவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Sep 12, 2022, 10:02 AM IST

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் சுவற்றில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் தாக்கல் செய்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.


உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் சுவற்றில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் தாக்கல் செய்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

மதரீதியாக மிகவும் உணர்ப்பூர்வமான வழக்கு என்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
மாவட்ட நீதிபதி ஏ.கே. விஷ்வேஷ் கடந்த மாதம் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.

Tap to resize

Latest Videos

‘புரட்சிகர சாது’ துவராக பீடம் சங்கராச்சார்யா ஸ்வரூபானந்தா காலமானார்

வழக்கு விவரம் என்ன

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  ஒரு குழுவை நியமித்தது. அந்த குழுவினர் மசூதியை ஆய்வுசெய்து வீடியோ எடுத்தனர், அப்போது, மசூதியில் ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கிடையே இந்த குழுவின் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 

உத்தரகாண்டை புரட்டிப்போட்ட மேக வெடிப்பு... வெள்ளத்தால் வீடுகளை இழந்த குடும்பங்கள்!!

உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பில் அஞ்சுமன் இந்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி வைத்த வாதத்தில் “ கியான்வாபி மசூதி வக்புவாரியத்தின் சொத்து” எனத் தெரிவித்தனர். இந்துக்கள் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ், தரப்பில் “கோயிலை இடித்துவிட்டு, மசூதி கட்டப்பட்டதாகத்” தெரிவித்தார்

கடந்த 1669ம் ஆண்டு முகலாயர் ஆட்சியில் மன்னர் அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதியை இடித்தார். அந்தபகுதியில்தான் கியான்வாபி மசூதியை எழுப்பினார். ஆதலால், கியான்வாபி மசூதியை ஆக்கிரமிக்கவும், நுழையவும் முஸ்லிம்களுக்க எந்த உரிமையும் இல்லை என இந்துக்கள் தரப்பில் வாதிடப்பட்டது

ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் கூறுகையில்கியான்வாபி மசூதி வளாகத்தில் எந்த இந்துக் கோயிலும் இல்லை, தொடக்கத்தில் இருந்தே மசூதி இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும், சிவில் நீதிமன்றத்தில் இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவையும் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த மே 20ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!

இதற்கிடையே உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 21ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “ மாவட்ட நீதிமன்றம் கியான்வாபி மசூதி வழக்கில் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்று பார்க்கலாம். அதன்பின் இந்த வழக்கை விசாரிக்கிறோம் எனத் தெரிவித்து அக்டோபர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் ஆய்வுக்குழுவினரால் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபாடு செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கவம் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் மாவட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரித்து முடித்து தீர்ப்பை கடந்த மாதம் ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து வாரணாசி நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

click me!