
கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் பட்சத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது. கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 11 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 11 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் கடந்த 10 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 11-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது.