பரபரப்பு..! உணவு டெலிவரை பாயை நடுரோட்டில் செருப்பால் அடித்து தாங்கிய பெண்.. நடந்தது என்ன..? வீடியோ வைரல்..

Published : Apr 16, 2022, 09:11 PM IST
பரபரப்பு..! உணவு டெலிவரை பாயை நடுரோட்டில் செருப்பால் அடித்து தாங்கிய பெண்.. நடந்தது என்ன..? வீடியோ வைரல்..

சுருக்கம்

உணவு டெலிவர் செய்யும் நபரை நடுரோட்டில் வைத்து பெண் ஒருவர் செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   

உணவு டெலிவர் செய்யும் நபரை நடுரோட்டில் வைத்து பெண் ஒருவர் செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டெலிவரி  நபரின் பைக் அந்த பெண்ணின் ஸ்கூட்டியில் மோதியதில் தனக்கு காயம் அடைந்தாக அந்தப் பெண் வீடியோவில் கூறுகிறாள். மேலும் அவள் டெலிவரி ஏஜென்டை தனது செருப்பால் ஓங்கி அடிக்கிறாள். அங்கு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அடிப்பதை நிறுத்தும் படி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து சரமாரியாக தனது செருப்பால பளார் பளாரென்று அடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில், அந்த பெண் அந்த நபரை உதைக்கவும் செய்கிறாள்.

இந்நிலையில் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த பெண் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது செல்போனில் பேசிக் கொண்டு சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறிகின்றனர். மேலும் ஒரு சிலர் பைக் ஓட்டி வந்த டெலிவிரி ஏஜெண்ட் சாலையின் தவறான பக்கத்தில் வந்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். 

ஆனாலும் அந்த நபர் தவறாக வந்தாலும், அதற்கு இப்படியா போட்டு அடிக்கனும் என்றும் சிலர் அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.அந்த பெண் சூழ்நிலையை கையாண்ட விதம் மிகவும் மூர்க்கத்தனமானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "இது அவரது தவறு, ஆனால் அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது" என்று என்று சிலர் பதிவிட்டுள்ளனர். 

அந்த பெண் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், டெலிவரி ஏஜெண்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மற்றொருவர் எழுதியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  லக்னோவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பில், பெண் ஒருவர், இதேபோல், டாக்சி ஓட்டுநரை கடுமையாக தாக்கினார். அந்த ஓட்டுநர் தன் மீது மோதி முயன்றதாக குற்றம் சாட்டிய பெண், போக்குவரத்து ஊழியர்கள் முன்னிலையில் அவரை பலமுறை அறைந்தார். இந்த செயலுக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!