
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையிலான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை இன்று நள்ளிரவு முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கான அறிமுக விழா இன்று நள்ளிரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைறுகிறது.
இந்த விழாவில் ஜஎஸ்டி வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அறிவிக்கிறார். அப்போது அவர், மணியடித்து ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் அமித் அன்சாரி, மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் மக்களவை துணைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டாம் என்று எதிர்கட்சியினரை நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டுள்ளார். ஜிஎஸ்டி வரி முறையால் தொழில்துறை பாதிக்கப்படும் என கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசின் அவசரகதியை கண்டிக்கும் வகையில் துவக்க விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வித்திட்ட ஜிஎஸ்டி பாஜகவின் எதிர்ப்பால் முடங்கிபோனது. ஆனால் அதை இப்போது தங்களுடைய சாதனையாக கூறி மோடி அரசு அரசியல் ஆதாயம் தேடுகிறது என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இதனிடையே ஜிஎஸ்டி அறிமுக விழாவில் எம்பிக்கள், பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள், மாநில நிதியமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். நாட்டின் சுதந்திர பொன் விழாவுக்கு பின்னர், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ள விழாவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.