சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை என மாநிலங்களவையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை என மாநிலங்களவையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பல கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. எட்டு வழிச்சாலை திட்டமும் இன்னும் செயல்பாட்டில் உள்ளது.
இதையும் படிங்க: தொழிலதிபரிடம் போலீஸ் அதிகாரி போல நடித்து ரூ.1.75 கோடி அபேஸ்! காதலியுடன் சொகுசு வாழ்க்கை!
இதனிடையே மாநிலங்களவையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே 277.33 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஏதேனும் விண்ணப்பம் கிடைத்துள்ளதா? இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எதிர்ப்பு ஏதேனும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதா? என என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: துபாய் சுற்றுலா போகலாமா! ரயில்வே வழங்கும் அட்டகாசமான திட்டம்!
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில்ளித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை - சேலம் இடையிலான 277.33 கி.மீ நீளமுள்ள 8 வழிச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு எந்த ஒரு விண்ணப்பமும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை என தெரிவித்துள்ளார். எதிர்கட்சியாக இருந்த போது எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது மௌனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.