
உத்திர பிரதேசத்தில் பரபரப்பான சாலையில் பைக் சாகசம் செய்த இளைஞர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ராம்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தார்.
இதையும் படிங்க: JMI பல்கலைக்கழக வேந்தராக டாக்டர் சையத்னா முஃப்தால் சைபுதீன் தேர்வு!
அந்த வீடியோவில் அந்த இளைஞர் பைக்கில் ஒருபுறமாக அமர்ந்துக் கொண்டு நடனம் ஆடியவாறு சென்றார். மிகவும் பரபரப்பான சாலையில் இதுபோல பைக்கில் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அந்த வீடியோவை பர்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையும் படிங்க: கொரோனா எழுச்சிக்கு பின் XBB.1.16 என்னும் புதுவகை வைரஸ் பரவலாம்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!
இதை அடுத்து இந்த வீடியோ உ.பி. காவல்துறை கவனத்திற்கு சென்றதை அடுத்து காவல்துறையினர் அந்த வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் வரும் இளைஞர் குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை. ஒரு வீடியோ வைரலானதை அடுத்து உ.பி. காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.