
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு, ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. மேலும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மேலும் படிக்க:சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால், நேரடி டிக்கெட் விநியோகத்தை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாத பக்தர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:418 ஆண்டுகளுக்கு பின் ஆதிகேசவ பெருமாள் கோவில் குடமுழுக்கு.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை..
இதன்படி மாதந்தோறும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.