லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இந்த விபத்தில், அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் பிளாஸ்டெரிங் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கிராமத்தினரே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சிறப்பாக பயன்படுத்துகின்றனர்… ப.சிதம்பரத்திக்கு பிரதமர் மோடி பதிலடி!!
லாலு யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவரது பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே லாலு பிரசாத்துக்கு சிறுநீரக நோய் இருப்பது தெரிந்ததே. இதன் காரணமாக, அவரின் பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை கூட கொடுக்காமல் உள்ளனர். லாலு யாதவின் உடல்நிலையை பல மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு
அவரது ஒவ்வொரு பாகத்தையும் நிபுணர்கள் குழு கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவை பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தந்தையும், கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் லாலு பிரசாத் விரைவில் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.