12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்!!

By Narendran SFirst Published Jul 5, 2022, 8:49 PM IST
Highlights

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். 61 நாட்கள் மீன்பிடித் தடைக் காலத்திற்குப் பிறகு மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கீழ காசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க கடந்த 1 ஆம் தேதி சென்றனர். 2 தினங்களுக்கு முன்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் 12 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: யூடியூபில் கிறிஸ்தவர்கள் பற்றி வெறுப்பூட்டும் பேச்சு… இஸ்லாமிய மதபோதகர் மீது வழக்குப்பதிவு!!

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களை சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்தனர். பின்னர் 12 மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். இத்தகவல் அறிந்ததும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்க கோரி புதுச்சேரி அரசுக்கு கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: காளி மாமிசம் சாப்பிடுவார் மது குடிப்பார்; லீனா மணிமேகலை வரிசையில் மஹுவா மொய்த்ரா\

அதில், காரைக்கால் கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன் என்பவருக்கு ெசாந்தமான படகில் சென்று கடந்த 3 ஆம் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, காரைக்கால் கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த இளையராஜா, கணேசன், பிரேம்குமார், ராமன், தர்மசாமி, மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்குடியை சேர்ந்த வீரா, தினேஷ், தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன், ஜெகதீஸ்வரன், விக்னேஷ், சந்திஸ்குமார், நாயகர்குப்பத்தை சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிப்பது குறித்து இலங்கை அரசுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். 

click me!