திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் திடீர் ரத்து.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல் !

By Raghupati RFirst Published Jul 10, 2022, 11:42 AM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுவாமி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலுக்கு வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 17ம் தேதி அன்று ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 12ம் தேதி கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் வகையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதனால் இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. நடிகையை ஏமாற்றிய புகார்.. எஸ்கேப் ஆன முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுவாமி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலுக்கு வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் வருகிற 17ம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மறுதினம் கோவில் முழுவதும் சுத்தம் மேற்கொள்ள ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசனம் ரத்து

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திருமலை திருப்பதி கோவில் முழுவதும் சுத்தம் செய்வதற்காக வருகிற 12ம் தேதி அன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதன்படி அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்தவுடன் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன் பிறகு 11 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் செய்திகளுக்கு.. கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..! வைரலாகும் தகவல்

ஆதலால் நாளை மறுதினம் 5 மணி நேரத்திற்கு அனைத்து பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 12ம் தேதி அன்று காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அன்றைய தினம் விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், 11ம் தேதி அன்று விஐபி தரிசனம் மேற்கொள்ள எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. Sri Lanka : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா.. சபாநாயகர் தகவல் !

click me!