30 நிமிடத்தில் இலவச தரிசனம்... ரூ.20-க்கு 2 லட்டு.. 'ஸ்பெஷல் ஸ்டாட்' ஒதுக்கிய திருப்பதி தேவஸ்தானம்!

By SG Balan  |  First Published Jun 9, 2024, 5:25 PM IST

மாற்றுத்திறனாளிகளும் மூத்த குடிமக்களும் அரை மணிநேரத்தில் இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இதற்காக தினசரி சிறப்பு ஸ்லாட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் கூறியுள்ளது.


உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் 30 நிமிடத்தில் இலவசமாக தரிசனம் செய்துவிட்டு, 20 ரூபாய்க்கு இரண்டு லட்டுகளையும் வாங்கிக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விசேஷ நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் இன்னும் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கம். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இப்போது அரை மணிநேரத்தில் திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம் மாற்றுத்திறனாளிகளும் மூத்த குடிமக்களும் அரை மணிநேரத்தில் இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இதற்காக தினசரி சிறப்பு ஸ்லாட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் கூறியுள்ளது.

ராமர் கடவுளே இல்லன்னு சொன்னவருக்கு மத்திய அமைச்சர் பதவியா! பாஜக போடும் கணக்கு என்ன?

நீண்ட வரிசையில் சிரமப்பட்டுக் காத்திருக்கும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் எடுத்துள்ளது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு இந்த சிறப்பு இலவச தரிசன ஸ்டாட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்லாட்டில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பார்க்கிங் ஏரியாவில் இருந்து கோவில் வாசலில் உள்ள கவுன்டர் வரை மின்சார கார் இயக்கப்படுகிறது. முதியோரும் மாற்றுத் திறனாளிகள் இவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவர்கள் வெறும் ரூ.20 மட்டும் செலுத்தி இரண்டு லட்டுகளையும் பிரசாதமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தச் சிறப்பு தரிசன ஸ்லாட்டில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் இந்த ஸ்லாட்டில் தரிசனம் செய்ய வரும்போது கட்டாயமாக ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அதற்கான அடையாள அட்டையையும் அவசியம் கொண்டுவர வேண்டும்.

முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய எம்.பி.க்கள் ஒருத்தர் கூட இல்ல... பாஜக கூட்டணியின் லட்சணம் இதுதான்!

click me!