பிரதமர் மோடியைச் சந்தித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக்! எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிக்க திட்டம்!

By SG Balan  |  First Published Apr 19, 2023, 7:47 PM IST

ஆப்பிள் சிஇஓ டிம் குக் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியது குறித்து ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். இந்தியாவில் கல்வி, சுற்றுச்சூழல் முதலிய பல துறைகளில் முதலீடு செய்யக் காத்திருப்பதாவும் சொல்கிறார்.


மும்பையில் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் விற்பனையகம் திறக்கப்படுவதை முன்னிட்டு இந்தியா வந்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை மும்பையில் பிரம்மாண்டமான ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்தார்.

இன்று (புதன்கிழமை) டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "பிரதமர் மோடியின் அன்பான வரவேற்புக்கு நன்றி. இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கல்வி, சுற்றுச்சூழல் துறைகளில் இந்தியா முழுவதும் முதலீடு செய்வோம்." எனக் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியின் திறனை அங்கீகரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியை டிம் குக் பாராட்டி இருக்கிறார்.

நடிகையின் கன்னத்தைக் கிள்ளிய எடியூரப்பா! சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்!

An absolute delight to meet you, ! Glad to exchange views on diverse topics and highlight the tech-powered transformations taking place in India. https://t.co/hetLIjEQEU

— Narendra Modi (@narendramodi)

ஆப்பிள் சிஇஓ டிக் குக்கின் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "உங்களை சந்தித்ததில் முழு மகிழ்ச்சி, டிம் குக்! இந்தியாவில் தொழில்நுட்பத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியும் இன்னும் பல்வேறு விஷயங்களைக் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மும்பையில் அந்நிறுவனத்தின் பிரத்யேக ஷோரும் திறக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆப்பிள் தனது தயாரிப்புகளை இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்யும் பணியில் இறங்கி இருக்கிறது.

அருணாச்சலில் 600 புத்த துறவிகள் கலந்துகொண்ட மாநாடு! சீனாவின் அத்துமீறலுக்கு பதில்!

மும்பையில் தொடங்கப்பட்டுள்ள ஆப்பிள் ஸ்டோரில் 20 மொழிகளில் பேச்சக்கூடிய 100 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நாளை (வியாழக்கிழமை) மற்றொரு ஆப்பிள் ஸ்டோர் தலைநகர் டெல்லியில் திறக்கப்பட உள்ளது. ஆப்பிள் நிறுவனம் 500க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை வைத்திருக்கும் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இடம்பெற்றுவிட்டது.

click me!